உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Wikipedia

Search results

Friday, September 23, 2011

பதினெண் மேற்கணக்கு-எட்டுத்தொகை

ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.
மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்


அகநானூறு
அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

புறநானூறு
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

கலித்தொகை
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.

குறுந்தொகை 
குறுந்தொகை பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

 நற்றிணை 
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.தொகுப்பித்தோன் : பன்னாடு தந்த மாறன் வழுதி தொகுத்தோன் : அறியப்பட வில்லை 400 பாடல்கள். சிறுமை 8 அடி உயர்வு 12 அடி 385 ம் பாடல் பிற்பகுதி மறைந்தது 234 ம் பாடல் என ஐயுறுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. 56 பாடல்களின் ஆசிரியர் அறியப்படவில்லை  ஏனையவற்றின் ஆசிரியர்கள் 192 திணைக்குறிப்புகள் நூல் பதிப்பித்தோரால் அகம், கலி, ஐங்குறுநூறு உள்ளதற்கு இணையாக காட்டப்பட்டுள்ளன. எனினும் பாடல் விளக்க அடிக்குறிப்புகள் பழமையானதே.

சங்க இலக்கிய நூல்கள்


பதினெண் மேற்கணக்கு

1. எட்டுத்தொகை
ஐங்குறுநூறு
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
குறுந்தொகை
நற்றிணை
பரிபாடல்
பதிற்றுப்பத்து

2. பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம்
மதுரைக் காஞ்சி
முல்லைப் பாட்டு
நெடுநல்வாடை
பட்டினப் பாலை
பெரும்பாணாற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை

பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கைந்நிலை

ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயணகுமார காவியம்
நாககுமார காவியம்
யசோதர காவியம்
சூளாமணி
நீலகேசி


தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தலாம் .

1. சங்க காலம் (கிமு 300 - கிபி 300).
2. சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700).
3. பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200).
4. மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800).
5. தற்காலம் (கிபி 1800 - இன்று வரை).

  எண் ஒலிப்பு


   எண் அளவு சொல்
   1/320 320 ல் ஒரு பங்கு முந்திரி
   1/160 160 ல் ஒரு பங்கு அரைக்காணி
   3/320 320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
   1/80 80 ல் ஒரு பங்கு காணி
   1/64 64 ல் ஒரு பங்கு கால் வீசம்
   1/40 40 ல் ஒரு பங்கு அரைமா
   1/32 32 ல் ஒரு பங்கு அரை வீசம்
   3/80 80 ல் மூன்று பங்கு முக்காணி
   3/64 64 ல் மூன்று பங்கு முக்கால் வீசம்
   1/20 20 ஒரு பங்கு ஒருமா
   1/16 16 ல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
   1/10 10 ல் ஒரு பங்கு இருமா
   1/8 8 ல் ஒரு பங்கு அரைக்கால்
   3/20 20 ல் மூன்று பங்கு மூன்றுமா
   3/16 16 ல் மூன்று பங்கு மூன்று வீசம்
   1/5 ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
   1/4 நான்கில் ஒரு பங்கு கால்
   1/2 இரண்டில் ஒரு பங்கு அரை
   3/4 நான்கில் மூன்று பங்கு முக்கால்
   1 ஒன்று ஒன்று

   திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றிதழ்கள்

   திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றிதழ்கள்

   சான்றிதழ் யுனிவர்சல் (U)
   என்பது எல்லாரும் எல்லா வயதினரும் பார்ப்பது.

   சான்றிதழ்(UA)
   என்பது பெற்றோர்களின் வழிகாட்டுதல்படி குழந்தைகளும் பார்ப்பது.

   சான்றிதழ்(A)
   என்பது வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

   சான்றிதழ் (S)
   மருந்துவர்களும், அறிவியல் துறை சம்பந்தப் பட்டவர்களும் பார்ப்பதற்காக மட்டும் உள்ள படங்கள். நம் ஊரில் இதுவரை (S) சான்றிதழ் தந்ததில்லை என்கின்றனர் தணிக்கை அலுவலக அதிகாரிகள்.

   Thursday, September 22, 2011

   இந்திய அரசியலமைப்புச் சட்டம்

   பகுதி 1 (ஷரத்து 1-4) 
   இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

   பகுதி 2 (ஷரத்து 5-11) 
   இந்திய குடியுரிமை பற்றியது.

   பகுதி 3 (ஷரத்து 12-35) 
   அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

   பகுதி 4 (ஷரத்து 36-51) 
   அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

   பகுதி 5 ( ஷரத்து 51 A) 
   அடிப்படை கடமைகள்.

   பகுதி 6 (ஷரத்து 52- 151)
    மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.

   பகுதி 6( ஷரத்து 152-237) 
   மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

   பகுதி 7 (ஷரத்து 238) 
   அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

   பகுதி 8 (ஷரத்து 239 -242) 
   மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.

   பகுதி 9 ( ஷரத்து 243) 
   உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.

   பகுதி 10 ஷரத்து 244 
   THE SCHEDULED AND TRIBAL AREAS.

   பகுதி 11 (ஷரத்து 245-263) 
   மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

   பகுதி 12 (ஷரத்து 264-300) 
   அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

   பகுதி 12( ஷரத்து 301- 307) 
   இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.

   பகுதி 13( ஷரத்து 308-323) 
   அரசுப் பணி.

   பகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி) 
   மத்திய தீர்ப்பாயங்கள்.

   பகுதி 15 (ஷரத்து 324-329) 
   தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.

   பகுதி 16 (ஷரத்து 330-342) 
   ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

   பகுதி 17 (ஷரத்து 343-351) 
   மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

   பகுதி 18 (ஷரத்து 352-360) 
   அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)

   பகுதி 19 (ஷரத்து 361-367) 
   இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

   பகுதி 20 (ஷரத்து 368) 
   இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

   பகுதி 21 (ஷரத்து 369-392) 
   TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.

   பகுதி 22 (ஷரத்து 392-395) 
   SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS

   தேசிய சின்னங்கள்

   தேசிய கீதம் : ஜனகண மன...

   தேசியப்பாடல் : வந்தே மாதரம்

   தேசிய சின்னம் : அசோக சக்கரம்

   தேசிய கொடி : மூவர்ணக் கொடி

   தேசிய காலண்டர் : சக வருடம்

   தேசிய விலங்கு : புலி

   தேசிய நீர் வாழ் விலங்கு : டால்பின்

   தேசிய நதி : கங்கை

   தேசிய பறவை : மயில்

   தேசிய மலர் : தாமரை 

   தேசிய மரம் : ஆலமரம்

   கனி : மாம்பழம்

   விளையாட்டு : ஹாக்கி